
For Auto Scrolling Click Here
-->
✖
ஸ்தோதிரபலிகள்
பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
1.எங்களை ஆசீர்வதிப்பவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 1:28
2.நோவாவுக்குத் தயவு காண்பித்தவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 6:8
3.இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 8:21
4.எங்களுக்காகப் பழிக்குப்பழி வாங்குகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 9:5
5.உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 12:2
6.உன் பேரைப் பெருமைப்படுத்துவேன் என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 12:2
7.உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 12:3
8.பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 12:3
9.ஆபிராமுக்குத் தரிசனமானவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 12:7
10.உன்னதமான ஆசீர்வாதத்தைத் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 14:19
11.நான் உனக்குக் கேடகமும், மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 15:1
12.ஆபிரகாமுடன் உடன்படிக்கைப் பண்ணினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 15:18
13.எங்கள் சந்ததியைப் பெருகப்பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 16:10
14.என்னைக் காண்கிற தேவனே 每 ஸ்தோத்திரம், ஆதி 16:13
15.சர்வ வல்லமையுள்ள தேவனே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:1
16.உன்னதமான தேவனே 每 ஸ்தோத்திரம், ஆதி 14:18
17.எங்களை திரளாய்ப் பெருகப்பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:2
18.ஆபிராம் என்ற பெயரை ஆபிரகாம் என்று மாற்றினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:5
19.உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன் என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:6
20.நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:8
21.உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள் என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:6
22.எங்கள் தேவனே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:8
23.நித்திய உடன்படிக்கையை ஸ்தாபிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:18
24.ஆபிரகாமுடன் பேசினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 17:22
25.ஆபிரகாமிற்கு ஒன்றையும் மறைக்காதவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 18:18
26.சர்வலோக நியாயாதிபதியே 每 ஸ்தோத்திரம், ஆதி 18:25
27.நீதி செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 18:25
28.எங்கள் மேல் இரக்கம் வைக்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 19:16
29.ஆபிரகாமை தீர்க்கதரிசியாக மாற்றினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 20:7
30.ஆபிரகாமின் நிமித்தம் அபிமெலேக்கின் குடும்பத்துக்கு அநுக்கிரகம் பண்ணினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 20:18
31.வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 21:17
32.எங்கள் சத்தத்தை கேட்டகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 21:17
33.தேவைகளை சந்திக்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 22:14
34.எங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 22:17
35.எங்கள் சந்ததியை கடற்கரை மணலைப் போல பெருகச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 22:17
36.எனக்கு தம்முடைய பெயரில் ஆணையிட்டுக் கொடுத்தவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 22:18
37.ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே 每 ஸ்தோத்திரம், ஆத?:42
38.பிரயாணத்தை வாய்க்கப் பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 24:40
39.என்னை நேர்வழியாய் நடத்துகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 24:48
40.ஈசாக்கை 100 மடங்கு ஆசீர்வதித்தவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 26:12
41.எனக்கு வானத்து பனியையும், பூமியின் கொழுமையையும் கொடுப்பவரே 每ஸ்தோத்திரம், ஆதி 27:28
42.மிகுந்த தானியத்தையும், திராட்சரசத்தையும் கொடுக்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 27:28
43.நான் படுத்திருக்கும் பூமியை எனக்குத் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 28:13
44.என் சந்ததியை பூமியின் தூளைப் போல மாற்றுகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 28:14
45.எனனை மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்பும்படிச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 28:14
46.என்னோடு இருப்பவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 28:15
47நான் போகிற இடத்திலெல்லாம் என்னைக் காப்பவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 28:15
48.நான் உனக்குச் சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 28:15
49.பெத்தேலில் யாக்கோபுக்குத் தரிசனமானவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 28:19
50.வானத்தின் வாசலை எனக்காகத் திறந்தவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 28:17
51.என் சிறுமையைப் பார்த்தவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 29:32
52.நான் அற்பமாய் எண்ணப்பட்டதை கேட்டருளினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 29:33
53.என்னை துதிக்கச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 29:35
54.என் வழக்கைத் தீர்க்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 30:6
55.என் சத்தத்தைக் கேட்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 30:6
56.என்னை ஏராளமாக்குகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 30:11
57.என்னை பாக்கியவனாக மாற்றினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 30:13
58.எனக்குச் செவிகொடுக்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 30:17
59.நல்ல ஈவைத் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 30:20
60.என் நிந்தையை மாற்றினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 30:22
61.யாக்கோபின் தொடைச்சந்தை தொட்டவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 32:25
62.யாக்கோபு என்னும் பேரை இஸ்ரவேல் என்று மாற்றினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 32:28
63.எனக்குச் சாட்சியாயிருப்பவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 31:50
64.பயபக்திக்குரியவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 31:53
65.ஏல்எல்லோகே இஸ்ரவேலே 每 ஸ்தோத்திரம், ஆதி 33:20
66.எனக்கு மங்களமான உத்தரவு அருள் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 41:16
67.தாம் செய்யப் போகிறதை தம்முடையப் பிள்ளைகளுக்கு அறிவிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 41:25
68.யோசேப்பை எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாக்கினவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 41:41
69.என்னை தேச முழுமைக்கும் அதிகாரியாக வைப்பவரே 每 ஸ்தோத்திரம், ஆதி 41:41
69.எங்கள் குடும்பங்களை தழைக்கும் படிச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 1:21
70.சாமாதான கர்த்தரே 每 ஸ்தோத்திரம், ஆதி 49:10
71.நியாயப் பிரமாணிகரே 每 ஸ்தோத்திரம், ஆதி 49:10
72.எனக்கு நன்மை செய்தவரே 每 ஸ்தோத்திரம், யாத் 1:20
73.இஸ்ரவேலை கண்ணோக்கினவரே 每 ஸ்தோத்திரம், யாத் 2:25
74.முட் செடியில் தரிசனமானவரே 每 ஸ்தோத்திரம், யாத் 3:2
75.அக்கினி ஜீவாலையே 每 ஸ்தோத்திரம், யாத் 3:2
76.என்னை பேர் சொல்லி அழைக்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 3:4
77.என் பிதாக்களின் தேவனே 每 ஸ்தோத்திரம், யாத் 3:6
78.இருக்கிறவராக இருக்கிறேன் என்றவரே 每 யாத் 3:14
79.இருக்கிறேன் என்றவரே 每 ஸ்தோத்திரம், யாத் 3:14
80.ஆபிரகாமின் தேவனே 每 ஸ்தோத்திரம், யாத் 3:15
81.ஈசாக்கின் தேவனே 每 ஸ்தோத்திரம், யாத் 3:15
82.யாக்கோபின் தேவனே 每 ஸ்தோத்திரம், யாத் 3:15
83.என் வாயோடே இருந்து நான் பேச வேண்டியதை எனக்குப் போதிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 4:12
84.இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தவரே 每 ஸ்தோத்திரம், யாத் 4:31
85.நான் யோகோவா என்றவரே 每 ஸ்தோத்திரம், யாத் 6:2
86.எங்கள் சுமைகளை நீக்குபவரே - ஸ்தோத்திரம், யாத் 6:6
87.என்னை விடுவிக்கிற தேவனே 每 ஸ்தோத்திரம், யாத் 6:7
88.மோசேயை பார்வோனுக்கு தேவனாக மாற்றினவரே 每 ஸ்தோத்திரம், யாத் 7:2
89.அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 7:3
90.மகிமையாய் வெற்றி சிறந்தவரே 每 யாத் 15:1
91.குதிரையையும், குதிரைவீரனையும் கடலிலே தள்ளினவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:1
92.என் பெலனே 每 ஸ்தோத்திரம், யாத் 15:2
93.என் கீதமுமானவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:2
94.எனக்கு இரட்சிப்புமானவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:2
95.என் தகப்பனுடைய தேவனே 每 ஸ்தோத்திரம், யாத் 15:2
96.யுத்தத்தில் வல்லவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:3
97.தமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நிற்கச் செய்தவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:8
98.வெள்ளத்தை குவியலாக நிற்கச் செய்தவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:8
99.ஆழமான ஜலத்தை நடுக்கடலில் உறையச் செய்தவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:8
100.பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:11
101.துதிகளில் பயப்படத்தக்கவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:11
102.அற்புதங்களைச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:11
103.பரிகாரியாகிய கர்த்தரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:26
104.பன்னிரண்டு நீரூற்றுகளையும், எழுபது பேரீச்சமரங்களையும் தந்தவரே 每 ஸ்தோத்திரம், யாத் 15:27
105.வானத்திலிருந்து காடைகளையும், அப்பத்தையும் வருஷிக்கப் பண்ணினவரே 每 ஸ்தோத்திரம், யாத் 16:13,14
106.எல்லாத் தேவர்களைப் பார்க்கிலும் பெரியவரே 每 ஸ்தோத்திரம், யாத் 18:11
107.சீனாய் மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினவரே 每 ஸ்தோத்திரம், யாத் 19:20
108.என் அப்பத்தையும், என் தண்ணீரையும் ஆசீர்வதிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 23:25
109.வியாதியை என்னிலிருந்து விலக்குகிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 23:25
110.கர்ப்பம் விழுகிறதும், மலடும் என் தேசத்திலிராதப்படிச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 23:26
111.என் ஆயுசு நாட்களை பூரணப்படுத்துகிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 23:26
112.என் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 23:27
113.என் சத்துருக்களை துரத்தி விடும்படி குளவிகளை அனுப்புகிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 23:28
114.என்னை பரிசுத்தமாக்குகிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 29:43
115.எங்கள் நடுவிலே வாசம் பண்ணுகிறவரே 每 யாத் 29:45
116.இரக்கமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யாத் 34:6
117.கிருபையுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யாத் 34:6
118.நீடிய சாந்தமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யாத் 34:6
119.மகா தயைவுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யாத் 34:6
120.சத்தியமுள்ள தேவனே 每 ஸ்தோத்திரம், யாத் 34:6
121.ஆயிரம் தலைமுறைகளுக்கும் இரக்கத்தைக் காக்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 34:7
122.அக்கிரமத்தையும், மீறுதலையும் மன்னிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 34:7
123.நான் உன்னோடுகூட இருந்து செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் என்றவரே 每 ஸ்தோத்திரம், யாத் 34:10
124.பெசலெயேலைப் பேர் சொல்லி அழைத்தவரே 每 ஸ்தோத்திரம், யாத் 35:30
125.போதிக்கும் வரத்தை தருகிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 35:34
126.என் இருதயத்தை ஞானத்தினால் நிரப்புகிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 35:35
127.கிருபாசனத்தின் மேல் நிற்கிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 16:2
128.பரிசுத்தரே 每 ஸ்தோத்திரம், லேவி 19:2
129.எங்களை தம்முடைய ஜனமாகப் பிரித்தவரே 每 ஸ்தோத்திரம், லேவி 20:26
130.எங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனை ஒருங்கே தருகிறவரே 每 லேவி 25:21
131.ஏற்றக் காலத்தில் மழைபெய்யச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:4
132.எங்கள் தேசங்களில் சமாதானம் கட்டளையிடுகிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:6
133.துஷ்ட மிருகங்கள் எங்கள் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:6
134.எங்களில் ஜந்து பேர் நூறு பேரைத் துரத்தும் படி செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:8
135.எங்களில் நூறு பேர் பதினாயிரம் பேரைத் துரத்தும் படி செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:8
136.எங்கள் சத்துருக்களை பட்டயத்தால் விழும்படிச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:8
137.எங்கள் மேல் கண்ணோக்கமாயிருப்பவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:9
138.எங்களை பலுகவும் பெருகவும் பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:9
139.எங்களோடு தம்முடைய உடன் படிக்கையைத் திடப்படுத்துகிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:9
140.பட்டயத்தை எங்கள் தேசத்தில் இருந்து எடுத்துப் போடுகிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:6
141.எங்கள் நடுவில் தம்முடைய வாசஸ்தலத்தை ஸ்தாபிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:11
142.எங்கள் நடுவில் உலாவுகிறவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:12
143.எங்களை தம்முடைய ஜனமாய்த் தெரிந்து கொண்டவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:12
144.எங்கள் நுகத்தடிகளை முறித்துப் போட்டவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:13
145.எங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணினவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:13
146.எங்கள் பிதாக்களோடு பண்ணின உடன்படிக்கையை நினைப்பவரே 每 ஸ்தோத்திரம், லேவி 26:42
147.தம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசிக்கப்பண்ணி, எங்கள் மேல் கிருபையாயிருப்பவரே 每 ஸ்தோத்திரம், எண் 6:25
148.எங்களுக்குச் சமாதானத்தைத் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், எண் 6:26
149.பரதேசிக்கும், சுதேசிக்கும் ஒரே கட்டளை தந்தவரே 每 ஸ்தோத்திரம், எண்
9:14
150.நல்ல வாக்குத்தத்தம் பண்ணினவரே 每 ஸ்தோத்திரம், எண் 10:29
151.எங்களுக்கு மன்னாவைப் பெய்யச் செய்தவரே 每 ஸ்தோத்திரம், எண் 11:9
152.தம்முடைய சாயலை மோசேக்குக் காண்பித்தவரே 每 ஸ்தோத்திரம், எண் 12:8
153.எங்கள் பங்கும், எங்கள் சுதந்தரமுமாய் இருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், எண் 18:20
154.கன்மலையைப் பிளந்து தண்ணீர் குடிக்கக் கொடுத்தவரே 每 ஸ்தோத்திரம், எண் 20:11
155.ஊற்றுத் தண்ணீரே 每 எண் 21:17
156.பிலேயாமின் கண்களைத் திறந்தவரே 每 ஸ்தோத்திரம், எண் 22:31
157.கழுதையைக் கொண்டு பேசினவரே 每 ஸ்தோத்திரம், எண் 22:28
158.பொய் சொல்லாதவரே 每 ஸ்தோத்திரம், எண் 23:19
159.காண்டாமிருகத்துக் கொத்த பெலனை எங்களுக்குத் தந்தவரே 每 ஸ்தோத்திரம், எண் 23:22
160.யாக்கோபிலிருந்து உதிக்கும் நட்சத்திரமே 每 ஸ்தோத்திரம், எண் 24:17
161.இஸ்ரவேலிலிருந்து எழும்பும் செங்கோலே 每 ஸ்தோத்திரம், எண் 24:17
162.எங்களை ஆளுகைச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், எண் 24:19
163.மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தரே 每 ஸ்தோத்திரம், எண் 27:17
164.இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் எங்களுக்கு முன் செல்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 1:33
165.எங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், யாத் 33:14
166.மோசேயை பேர் சொல்லி அழைத்தவரே 每 ஸ்தோத்திரம், யாத் 33:12
167.எங்களுக்காக யுத்தம் பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 3:22
168.எங்களை உபதேசிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 4:36
169.பெரிய அக்கினியே 每 ஸ்தோத்திரம், உப:36
170.பட்சிக்கிற அக்கினியாய் இருப்பவரே 每 ஸ்தோத்திரம், உபா 4:24
171.சமீபமாயிருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 4:7
172.வானத்துக்கும், பூமிக்கும் தேவனாயிருப்பவரே 每 ஸ்தோத்திரம், உபா 4:39
173.எங்களோடு பேசுகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 5:24
174.அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 5:26
175.எங்களுக்கு உடன் படிக்கையையும் தயவையையும் காக்கிற உண்மையுள்ள தேவனே 每 ஸ்தோத்திரம், உபா 7:9
176.எங்கள் கனியை ஆசீர்வதிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 7:13
177.சகல நோய்களையும் எங்களை விட்டு விலக்குகிறவரே 每 உபா 7:15
178.அறியாதிருந்த மன்னாவினாலே எங்களைப் போஷித்தவரே 每 ஸ்தோத்திரம், உபா 8:3
179.ஒருவன் தன் புத்திரனை சிட்சிக்கிறது போல எங்களை சிட்சிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 8:5
180.நல்ல தேசத்தை எங்களுக்குத் தந்தவரே 每 ஸ்தோத்திரம், உபா 8:7
181.பெரிய வனாந்தர வழியாய் எங்களை நடத்துகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 8:15
182.பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்னுகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 8:15
183.ஜசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை எங்களுக்குக் கொடுக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 8:18
184.மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் எங்களை நடத்துகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 9:29
185.லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தவரே 每 ஸ்தோத்திரம், உபா 10:8
186.பட்சபாதம் பண்ணாதவரே 每 ஸ்தோத்திரம், உபா 10:17
187.பரிதானம் வாங்காதவரே 每 ஸ்தோத்திரம், உபா 10:17
188.திக்கற்ற பிள்ளைகளுக்கும், விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 10:18
189.அந்நியன் மேல் அன்பு வைத்து அன்ன வஸ்திரம் கொடுக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 10:18
190.என் புகழ்ச்சியே 每 ஸ்தோத்திரம், உபா 10:21
191.பெரிய பயரங்கரமான காரியங்களை செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 10:21
192.எங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடத்தையெல்லாம் எங்களுக்குத் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 11:24
193.எங்கள் பாளையத்திற்குள்ளே உலாவிக் கொண்டிருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 23:14
194.பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வெறுக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 25:13,14
195.பூமியிலுள்ள சகல ஜாதிகளைப் பார்க்கிலும் எங்களை மேன்மையாக வைப்பவரே 每 ஸ்தோத்திரம், உப?:1
196.பட்டணத்திலும், வெளியிலும் எங்களை ஆசீர்வதிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:3
197.என் கூடையையும், மாப்பிசைகிற தொட்டியையும் ஆசீர்வதிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:5
198.வருகையிலும், போகையிலும் என்னை ஆசீர்வதிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:6
199.எனக்கு விரோதமாய் எழும்பும், என் சத்துருக்களை முறிய அடிக்கப்படும் படி ஒப்புக்கொடுக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:7
200.எனக்கு விரோதமாய் வரும் சத்துருக்களை ஏழுவழியாய் ஓடிப் போகச்செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:7
201.என் களஞ்சியங்களிலும், நான் கையிடும் எல்லா வேலையிலும் ஆசீர்வாதம் கட்டளையிடுகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:8
202.கர்த்தாவே, நீர் கொடுக்கும் தேசத்திலே என்னை ஆசீர்வதிப்பவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:8
203.என்னை தமக்குப் பரிசுத்த ஜனமாய் நிலைப்படுத்துகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:9
204.தம்முடைய நாமத்தை எனக்குத் தரிப்பவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:10
205.பரிபூரண நன்மையை எங்களுக்குக் கட்டளையிடுகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:11
206.ஏற்றக் காலத்தில் எங்கள் தேசத்தில் மழை பெய்யச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:12
207.நான் கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:12
208.நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தை எங்களுக்காகத் திறப்பவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:12
209.எங்களை அனேக ஜாதிகளுக்குக் கடன் கொடுக்கும்படி மாற்றுகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:12
210.எங்களையோ கடன் வாங்காதப் படி செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:12
211.என்னை வாலாக்காமல் தலையாக்குகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:14
212.என்னை கீழாக்காமல் மேலாக்குகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 28:14
213.எனக்கு ஜீவனும், தீர்க்காயுசுமானவரே 每 ஸ்தோத்திரம், உபா 30:20
214.எனனோடுகூட வருகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 31:6
215.என்னை விட்டு விலகாதவரே 每 ஸ்தோத்திரம், உபா 31:6
216.என்னை கைவிடாதவரே 每 ஸ்தோத்திரம், உபா 31:6
217.பனித்துளிகள் போலிருக்கும் உம்முடைய வசனத்திற்காக 每 ஸ்தோத்திரம், உபா 32:2
218.மழையைப் போன்ற உபதேசத்தை உடையவரே 每 ஸ்தஒத்திரம், உபா 32:2
219.நியாயக் கேடில்லாத சத்தியமுள்ள தேவனே 每 ஸ்தோத்திரம், உபா 32:4
220.நீதியும், செம்மையுமானவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:4
221.என்னை வழிநடத்தினவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:12
222.பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின் மேல் என்னை ஏறிவரப் பண்ணினவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:13
223.வயலில் விளையும் பலனை எனக்கு புசிக்கக் கொடுத்தவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:13
224.கன்மலையிலுள்ள தேனை எனக்குத் தந்தவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:13
225.கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயை எனக்கு உண்ணும் படித் தந்தவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:13
226.கொழுமையான கோதுமையையும், இரத்தம் போன்ற திராட்சரசத்தையும் எனக்குத் தந்தவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:14
227.கிருபையுள்ளவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:43
228.என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:40
229.கொல்லுகிறவரும், உயிர்ப்பிக்கிறவருமாயிருப்பவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:39
230.காயப்படுத்துகிறவரும், சொஸ்தப்படுத்துகிறவருமாயிருப்பவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:39
231.எங்களுக்காக பழிக்குப்பழி வாங்குகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 32:35,43
232.சீயோனியிலிருந்து எழுந்தருளினவரே 每 ஸ்தோத்திரம், உபா 33:2
233.சேயீரிலிருந்து எங்களுக்கு உதயமானவரே 每 ஸ்தோத்திரம், உபா 33:2
234.பாரான் மலையிலிருந்து பிரகாசித்தவரே 每 ஸ்தோத்திரம், உபா 33:2
235.பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானவரே 每 ஸ்தோத்திரம், உபா 33:2
236.அக்கினிமயமான பிரமாணத்தை உடையவரே 每 ஸ்தோத்திரம், உபா 33:2
237.எங்கள் ராஜாவே 每 ஸ்தோத்திரம், உபா 33:5
238.பரிசுத்த புருஷரே 每 ஸ்தோத்திரம், உபா 33:8
239.முட்செடியில் எழுந்தருளினவரே 每 ஸ்தோத்திரம், உபா 33:16
240.அநாதி தேவனே 每 ஸ்தோத்திரம், உபா 33:27
241.எங்கள் அடைக்கலமே 每 ஸ்தோத்திரம், உபா 33:27
242.நித்திய புயத்தையுடையவரே 每 ஸ்தோத்திரம், உபா 33:27
243.எங்களுக்கு முன் நின்று எங்கள் சத்துருக்களைத் துரத்துகிறவரே 每 ஸ்தோத்திரம், உபா 33:27
244.யாக்கோபின் ஊற்றே 每 ஸ்தோத்திரம், உபா 33:28
245.எங்களுக்குச் சகாயஞ் செய்யும் கேடகமே 每 ஸ்தோத்திரம், உபா 33:29
246.நான் மோசேயோடே இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்று சொன்னவரே 每 ஸ்தோத்திரம், யோசுவா 1:5
247.எங்களுக்கு மகிமை பொருந்திய பட்டயமே 每 ஸ்தோத்திரம், உபா 33:29
248.நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்றவரே 每 ஸ்தோத்திரம், யோசுவா 1:5
249.நான் போகிற இடத்திலெல்லாம் என்னோடு கூட இருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், யோசுவா 1:9
250.ஜீவனுள்ள தேவனே 每 ஸ்தோத்திரம், யோசுவா 3:10
251.சர்வ பூமிக்கும் ஆண்டவரே 每 ஸ்தோத்திரம், யோசுவா 3:11
252.எகிப்தின் நிந்தையை புரட்டிப் போட்டவரே 每 ஸ்தோத்திரம், யோசுவா 5:9
253.நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு என்றவரே 每 ஸ்தோத்திரம், யோசுவா 8:1
254.நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையையும் தவறிப் போகவிடாதவரே 每 ஸ்தோத்திரம், யோசுவா 21:45, 23:14
255.தேவாதி தேவனாகிய கர்த்தரே 每 ஸ்தோத்திரம். யோசுவா 22:22
256.பரிசுத்தமுள்ள தேவனே 每 ஸ்தோத்திரம், யோசுவா 24:19
257.நியாயாதிபதிகளை எழும்பப் பண்ணினவரே 每 ஸ்தோத்திரம், நியா 2:16
258.கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், நியா 2:16
259.எங்களுக்காக மனஸ்தாபப்படுகிறவரே 每 ஸ்தோத்திரம், நியா 2:18
260.நீதியைச் சரிக்கட்டுகிறவரே 每 ஸ்தோத்திரம், நியா 5:2
261.சத்துருக்களை எங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தவரே 每 ஸ்தோத்திரம், நியா 5:2
262.சேயீரிலிருந்து புறப்பட்டு வருகிறவரே 每 ஸ்தோத்திரம், நியா 5:4
263.ஏதோமின் வெளியிலிருந்து நடந்து வருகிறவரே 每 ஸ்தோத்திரம், நியா 5:4
264.எங்களுக்கு பராக்கிரமசாலிகளின் மேல் ஆளுகைத் தந்தவரே 每 ஸ்தோத்திரம், நியா 5:13
265.தம்மில் அன்புகூறுகிறவர்களை வல்லமையாக உதிக்கிற சூரியனைப் போல் மாற்றுகிறவரே 每 ஸ்தோத்திரம், நியா 5:31
266.எங்களை அனுப்புகிறவரே 每 ஸ்தோத்திரம், நியா 6:14
267.ஒரே மனுஷனை முறியடிப்பதுப் போல எங்கள் சத்துருக்களை முறிய அடிப்பவரே 每 ஸ்தோத்திரம், நியா 6:16
268.எங்களை ஆளுகிறவரே 每 ஸ்தோத்திரம், நியா 8:23
269.எங்களுக்கு மனதுருகினவரே 每 ஸ்தோத்திரம், நியா 10:16
270.நியாயாதிபதியாகிய கர்த்தாவே 每 ஸ்தோத்திரம், நியா 11:27
271.அதியசம் என்னும் நாமம் உடையவரே 每 ஸ்தோத்திரம், நியா 13:18
272.நிறைவான பலனைத் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், ரூத் 2:12
273.எங்கள் அடைக்கலமே 每 ஸ்தோத்திரம், ரூத் 2:12
274.உயிரோடிருக்கிறவர்களுக்கும், மரித்தவர்களுக்கும் தயவு செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், ரூத் 2:20
275.எங்களுக்குத் தயை செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், ரூத் 4:14
276.கொல்லுகிறவரும், உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 2:6
277.பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 2:6
278.தரித்திரம் அடையச் செய்கிறவரும், ஜசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 2:7
279.தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமாயிருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 2:7
280.சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து, எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 2:8
281.எங்களை பிரபுக்களோடு உட்காரப்பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 2:8
282.எங்களுக்கு மகிமையுள்ள சிங்காசனத்தைத் தருகிறவரே 每 1 சாமு 2:8
283.தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 2:9
284.என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் என்றவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 2:30
285.சாமுவேலை பெயர் சொல்லி அழைத்தவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 3:4,6
286.என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பு செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 3:13
287.தம்முடைய வார்த்தைகளில் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து விட அனுமதிக்காதவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 3:19
288.தம்முடைய வார்த்தையினால் சாமுவேலுக்கு தம்மை வெளிப்படுத்தினவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 3:21
289.கேருபீன்களின் மத்தியில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தாவே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 4:4
290.பெலிஸ்தியரை இஸ்ரவேலுக்கு முன்பாக விழச் செய்தவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 7:10
291.இம்மட்டும் எங்களுக்கு உதவிச் செய்தவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 7:12
292.அநேக பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும் ரட்சிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 14:6
293.இஸ்ரவேலின் ஜெயபலமானவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 15:29
294.மனம் மாறாதவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 15:29
295.எங்கள் இருதயத்தைப் பார்க்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 16:7
296.தாவீதோடு கூட இருந்தவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 16:18
297.சிங்கத்தின் கைக்கும், கரடியின் கைக்கும் எங்களைத் தப்புவிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 17:37
298.இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனே 每 ஸ்தோத்திரம், 1 சாமு 17:45
299.நல்விசேஷங்களை வாக்குத்தத்தம் பண்ணினவரே 每 ஸ்தோத்திரம், 11 சாமு 7:28
300.எங்கள் விளக்கே 每 ஸ்தோத்திரம், 11 சாமு 22:29
301.ரட்சிப்பின் கேடகமே 每 ஸ்தோத்திரம், 11 சாமு 22:36
302.உம்முடைய காருணியத்தினால் என்னைப் பெரியவனாக்குகிறவரே 每 ஸ்தோத்திரம், 11 சாமு 22:36
303.கேளாத ஜசுவரியத்தையும், மகிமையையும் எங்களுக்குத்தருகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 இராஜா 3:13
304.எங்கும் இளைப்பாறுதலை தருகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 இராஜா 5:4
305.காரிருளிலே வாசம்பண்ணுகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 இராஜா 8:12
306.தாவீதை தெரிந்து கொண்டவரே 每 ஸ்தோத்திரம், 1 இராஜா 8:16
307.எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்திருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 இராஜா 8:40
308.எங்களுக்கு நிலையான வீட்டைக்கட்டுகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 இராஜா 11:38
309.பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவரே 每 ஸ்தோத்திரம், 11 இராஜா 19:15
310.ஜீவனுள்ள தகப்பனே 每 ஸ்தோத்திரம், 11 இராஜா 19:16
311.எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டவரே 每 ஸ்தோத்திரம், 11 இராஜா 20:5
312.எங்கள் கண்ணீரைக் கண்டவரே 每 ஸ்தோத்திரம், 11 இராஜா 20:5
313.மாட்சிமையும், வல்லமையும் உடையவரே 每 ஸ்தோத்திரம், 1 நாளா 29:11
314.மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உடையவரே 每 ஸ்தோத்திரம், 1 நாளா 29:11
315.எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 நாளா 29:11
316.ஐசுவரியத்தையும், கனத்தையும் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 நாளா 29:12
317.எல்லாவற்றையும் ஆளுகிறவரே 每 ஸ்தோத்திரம், 1 நாளா 29:12
318.சத்துவத்தையும், வல்லமையையும் உடையவரே 每 ஸ்தோத்திரம், 1 நாளா 29:12
319.எவரையும் மேன்மைப்படுத்தவும், பலப்படுத்தவும் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், 1 நாளா 29:12
320.கிருபையுள்ள கர்த்தரே 每 ஸ்தோத்திரம், 11 நாளா 30:19
321.தம்மை தேடுகிற எல்லா ஜனங்களுக்கும் நன்மையைத் தருகிறவரே 每 ஸ்தோத்திரம், எஸ்றா 8:22
322.பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே 每 ஸ்தோத்திரம், நெகேமியா 1:5
323.மகத்துவமும், பயங்கரமுமான தேவனே 每 ஸ்தோத்திரம், நெகே 1:5
324.எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லா கண்களிலும் தயை கிடைக்கச் செய்தவரே 每 ஸ்தோத்திரம், எஸ்தர் 2:15
325.சர்வவல்லவரே 每 ஸ்தோத்திரம், யோபு 5:17
326.உத்தமனை வெறுக்காதவரே 每 ஸ்தோத்திரம், யோபு 8:20
327.பொல்லாதவர்களுக்குக் கைக்கொடுக்காதவரே 每 ஸ்தோத்திரம், யோபு 8:20
328.இருதயத்தில் ஞானமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யோபு 9:4
329.பெலத்தில் பராக்கிரமமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யோபு 9:4
330.ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களைச் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், யோபு 9:10
331.எண்ணி முடியாத அதிசயங்களையும் செய்கிறவரே 每 ஸ்தோத்திரம், யோபு 9:10
332.என் இரட்சிப்பே 每 ஸ்தோத்திரம், யோபு 13:16
333.எங்கள் பசும்பொன்னே 每 ஸ்தோத்திரம், யோபு 22:25
334.எங்கள் சொக்க வெள்ளியே 每 ஸ்தோத்திரம், யோபு 22:25
335.தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தவரே 每 ஸ்தோத்திரம், யோபு 26:13
336.மகா நீதிபரரே 每 ஸ்தோத்திரம், யோபு 34:17
337.ஒருவரையும் புறக்கணியாதவரே 每 ஸ்தோத்திரம், யோபு 36:5
338.மன உருக்கத்தில் மகத்துவமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யோபு 36:5
339.கர்த்தரின் கிளையே 每 ஸ்தோத்திரம், ஏசா 4:2
340.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்றழைக்கப்படுகிறவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 6:3
341.பூமியனைத்தையும் தம்முடைய மகிமையால் நிரப்புகிறவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 6:3
342.ஏசாயாவின் உதடுகளைத் தொட்டு குணமாக்கினவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 6:7
343.எங்கள் பயமும், எங்கள் அச்சமுமாயிருக்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 8:13
344.எங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 8:14
345.எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் மாற்றினவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 8:18
346.இருளில் நடக்கிற ஜனங்களுக்கு பெரிய வெளிச்சமாயிருப்பவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 9:2
347.மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் பிராகாசிக்கிறவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 9:2
348.அதிசயமானவரே 每 ஸ்தோத்திரம், ஏசா 9:6
349.ஆலோசனைக்கர்த்தா 每 ஸ்தோத்திரம், ஏசா 9:6
350.வல்லமையுள்ள தேவனே 每 ஸ்தோத்திரம், ஏசா 9:6
351.சமாதானப் பிரபுவே 每 ஸ்தோத்திரம், ஏசா 9:6
352.நித்திய வாசியே 每 ஸ்தோத்திரம், ஏசா 57:15
353.பரிசுத்தரே 每 ஸ்தோத்திரம், ஏசா 57:15
354.துதியே 每 ஸ்தோத்திரம், எரே 17:14
355.உன்னதமானவரே 每 ஸ்தோத்திரம், தானி 4:25
356.ஈஷியே 每 ஸ்தோத்திரம், ஓசியா 2:16
357.இரக்கமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யோவேல் 2:13
358.மன உருக்கமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யோவேல் 2:13
359.நீடிய சாந்தமுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யோவேல் 2:13
360.தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவரே 每 ஸ்தோத்திரம், யோவேல் 2:13
361.தடைகளை நீக்கிப்போடுகிறவரே 每 ஸ்தோத்திரம், மீகா 2:13
362.நல்லவரே 每 ஸ்தோத்திரம், நாகூம் 1:7
363.மிகுந்த கிருபையுள்ளவரே 每 ஸ்தோத்திரம், யோவேல் 2:13
364.இக்கட்டு நாளிலே அரணான கோட்டையே 每 ஸ்தோத்திரம், நாகூம் 1:7
365.சேனைகளின் கர்த்தரே 每 ஸ்தோத்திரம், நாகூம் 3:6
366.தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே 每 ஸ்தோத்திரம், ஆபகூக் 1:13
367.இயேசுவே 每 ஸ்தோத்திரம், மத் 1:21
368.இம்மானுவேலே 每 ஸ்தோத்திரம், மத் 1:23
369.மகிமையுள்ள கர்த்தரே 每 ஸ்தோத்திரம், ஏசா 38:21
370.நியாயப்பிரமாணிகரே 每 ஸ்தோத்திரம், ஏசா 33:22
371.நசரேயனே 每 ஸ்தோத்திரம், மத் 2:23
372.நேசகுமாரனே 每 ஸ்தோத்திரம், மத் 3:17
373.தேவ ஆட்டுக்குட்டியே 每 ஸ்தோத்திரம், யோவான் 1:29,36
374.வார்த்தையே 每 ஸ்தோத்திரம், யோவான் 1:1
375.ரபீ
The Bible


The Bible