Loading...

ஆயத்தம்

Mountain View

For Auto Scrolling Click Here

-->

ஆயத்தம் நீ ஆயத்தப்படு உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து – எசேக்கியேல் 38:7 முன்னுரை: இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற ஒரு முக்கியமான நிகழ்ச்சி என்னவென்றால் அது தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் வருகையைக் குறித்ததான நிகழ்ச்சியே ஆகும், எந்த சபையை எடுத்தாலும் எந்த ஜெபக் கூட்டத்தை எடுத்தாலும் வேதத்தின் கடைசிப் பாகமே பிரசங்கிக்கப்பட்டு வருகிறது, தேவனுடைய வருகைக் குறித்து பேசுகிற நாம் முதலில் ஆயத்தப்பட்டிருக்கிறோமா? அல்லது நாங்கள் ஆயத்தப்பட்டுவிட்டோம் என்று சொல்லுகிற நீ மற்றவர்களை ஆயத்தப்படுத்திருக்கிறாயா? என்பது தான் என்னுடைய செய்தியாயிருக்கிறது. ஏனென்றால் இன்றைய காலக்கட்டத்தைப் பார்க்கும் போது தேவனைக் குறித்ததான பயமே இல்லை, ஆனால் அங்கு நடைபெறுகிற காரியம் என்னவென்றால் மற்றவர்களை அதாவது அப்பாவி ஜனங்களை பயமுறுத்துவதிலேயே இவர்களுடைய செய்தி போய் கொண்டிருக்கிறது. ஏன் இத்தகைய காரியத்தை நான் இங்கு எழுதுகிறேன் என்றால் ஆவிக்குரிய வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரியாமலேயே அனேக சபைகள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. சபையில் உள்ள போதகர் மற்றும் ஆராதனை நடத்துகிற வீரர்கள் மாத்திரமே அபிஷேகம் பெற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் அந்த சபையில் உள்ள அனைவரும் அபிஷேகம் பெற்றிருக்க வேண்டும் என்கிறதான ஒரு பொதுவான எண்ணம் சபையில் காணப்பட வேண்டும் அப்பொழுதுதான் நாம் சொல்ல முடியும் எங்கள் சபை தேவனுடைய வருகைக்கு ஆயத்தமாகி கொண்டேயிருக்கிறது. மாறுவோம் உண்மையான ஆயத்தமாகுதல் என்ன என்பதை புரிந்து கொள்வோம். பாருங்கள் வெளிப்படுத்தின சுவிசேஷத்தை அப்.யோவான் உடனே எழுதிவிட முடியாமல் அதாவது அவர் இந்த வெளிப்பாட்டை மிக சுலபமாகவோ அல்லது ஒரு குளிர்சாதன அறையில் இருந்தோ எழுதவில்லை. அவர் தேவனுக்குள் நன்றாக தன்னை பலப்படுத்திக் கொண்ட பிறகே அதாவது பலபாடுகளின் மத்தியில் அதாவது நாடு கடத்தப்பட்டு பத்மு தீவிலே தனியாக இருக்கும் போதே இந்த வெளிப்பாட்டை அவரால் எழுத முடிந்தது என்று சொன்னால் மிகையாகாது நாம் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தேவன் நல்லவர் என்று சொல்ல முடிகிறதா? அல்லது நல்ல வீடு கார் வேலை தந்ததற்காக இயேசு நல்லவர் என்று சொல்லி வருகிறோமா? இப்படி சொல்வதினால் நாம் பெலப்பட்டுவிட்டோம் அல்லது தேவனுடைய வருகைக்காகக் காத்திருக்கிறோம் என்று சொல்வதினால் ஒரு பிரயோஜனமுமில்லை. யோபுவை போல எல்லா சூழ்நிலையிலும் தேவனை ஸ்தோத்தரித்து வாழ்கிறவர்களே தேவனுடைய வருகைக்காக நாங்கள் ஆயத்தமாய் இருக்கிறோம் என்று சொல்ல முடியும். இப்படியாக ஆயத்தமாகிறவர்கள் மட்டுமே பின்வருமாறு சொல்ல முடியும், என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும் அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். அவரை நானே பார்ப்பேன் அந்நிய கண்கள் அல்ல என் கண்களே அவரைக் காணும் – யோபு 19:25 மற்றும் 27 வாருங்கள் நாமும் நம்முடைய சபையும் எப்படி ஆயத்தத்துக்குள்ளாக செல்ல வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம். 1.முதல் ஆயத்தம்: ஆதியில் இருந்த அன்பு கடைசிவரைக்கும் இருக்க வேண்டும் முதலாவது ஒரு காரியத்தை கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறவர்கள் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும் அதாவது கிறிஸ்தவர்கள் என்பதற்கு பொருள் அன்புள்ளவர்கள் என்கிற அர்த்தமும் உண்டு இந்த அன்பு மாமிசத்தில் உண்டாவது அல்ல மாறாக இத்தகைய அன்பு பரிசுத்த ஆவியினால் நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டதாய் இருக்க வேண்டும் [ ரோமர் 5:5 ] அப்பொழுதுதான் அந்த அன்பு சுயநலமில்லாததாய் அப்பவுலின் மூலமாய் தேவன் 1கொரி 13ம் அதிகாரத்தில் குறிப்பிட்டிருந்த தம்முடைய குண நலன்களை கொண்டதாய் இருக்கும் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம் இன்று ஏன் சபைகளில் பிரிவுகள் பிரச்சனைகள் வருகிறது என்றால் இந்த மெய்யான பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அன்பாகிய இயேசு இல்லாததே ஆகும். அடுத்ததாக தேவன் ஞாபகப்படுத்துகிற ஒரு விஷயம் நாம் இரட்சிக்கப்படும் போதும் பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்ட போதும் நமக்கு தேவன் மேல் இருந்த அன்பின் அளவு நம்முடைய கடைசி மூச்சு இருக்கும் வரை குறையாததாய் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அந்த மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்வான் என்று மத் 24:13ல் நாம் பார்க்க முடிகிறது. பாருங்கள் நன்றாக சென்று கொண்டிருந்த எபேசு சபையில் சில மாற்றங்களைப் பார்க்கிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த மாற்றங்களுக்கு பின்பாக இருக்கிற காரணம் அன்பின் முறைவு என்பதை தேவன் புரிந்து கொண்டார். ஆகவே தேவன் சொல்லுகிறார் உன் கிரியைகளையும் உன் பிரயாசத்தையும் உன் பொறுமையையும் நீ பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும் என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய். ஆகையால் நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து மனந்திரும்பி ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக. இல்லாவிட்டால் உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன் என்று வெளி 2:2-5 வரை வாசிக்கும் போது சபையின் நிலைமை எப்படியாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதாவது இந்த சபை நல்ல ஆவிக்குரிய சபையாகத்தான் காணப்படுகிறது அன்னியபாஷை நல்ல ஆராதனை ஆவிக்குரிய வரங்கள் எல்லாம் சபையில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் முதலில் அவர்கள் தேவன் மேல் வைத்திருந்த களங்கமில்லாத அந்த தெய்வீக அன்பு இப்பொழுது இல்லை. இப்பொழுதெல்லாம் இவர்கள் தங்களை மேன்மைப்படுத்துவதும் தங்கள் வரங்களை மற்றவர்களுக்கு காண்பிப்பதும் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டு பேசுவதும் அதாவது தங்களைக் குறித்து சாட்சிக் கொடுப்பதிலேயே மும்மரமாக இருந்தனர் தவிர, வருகிற விசுவாசிகளைக் குறித்து எந்த கவலையும் இல்லாதவர்களாய் காணப்பட்டனர். ஆகவேதான் தேவன் இப்படியாக சொல்லுகிறார் நீ எத்தனை வரங்களைப் பெற்றிருந்தாலும் எத்தனை கன்வென்ஷனில் பேசினாலும் எவ்வளவு பணத்தைக் காணிக்கையாக கொடுத்திருந்தாலும் அனேக ஊழியக்காரர்களை தாங்கியிருந்தாலும் இயேசுவிடம் காணப்பட்ட சுயநலமில்லாத தெய்வீக அன்பு உன்னிடம் இல்லாவிட்டால் நீ கிறிஸ்தவனாய் இருப்பதில் ஒரு பிரயோஜனமுமில்லை ஆகவே தான் தேவன் சொல்லுகிறார், குறைவுகளை நிறைவாக்குகிற அன்பைப் பெற்றுக் கொள் இப்படிப்பட்ட அன்பே சகலத்தையும் தாங்கும் அதாவது நமக்கு விரோதமாக என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும் அவர்களை மன்னிக்கிறவர்களாய் நாம் இருப்போம் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். எனக்கு பிரியமான விசுவாசிகளே, நம்மிடம் இத்தகைய அன்பு இருக்கிறதா? அல்லது உள்ளத்தில் வெறுப்பை வைத்துவிட்டு வெளியில் ஸ்தோத்திரம் சொல்லுகிறோமா? என்பதை சிந்தித்துப் பாருங்கள் ஏனென்றால் நம்முடைய தகப்பன் இருதயங்களையும் உள்ளங்களையும் ஆராய்ந்து அறிகிறவர் என்பதை மறந்து விட வேண்டாம் ஆதியில் இருந்த அன்பை இழந்து போனவர்கள் மறுபடியும் அந்த அன்பை தேவனிடம் மறுபடியும் கேளுங்கள் ஆதியில் இருந்தே அன்பு இல்லாமல் இருப்பவர்கள் இப்பொழுதே தேவனிடம் சென்று மன்னிப்பு கேட்டு அந்த மெய்யான அன்பை பெற்றுக் கொள்வோம் அப்பொழுதுதான் நாம் ஆயத்தமாக முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 2.இரண்டாவது ஆயத்தம்: படப்போகிற பாடுகளைக் குறித்துப் பயப்படாமல் இருக்க வேண்டும் வேதம் சொல்லுகிறது, நாம் அனேக உபத்திரங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள் என்று அப் 14:22ல் நாம் நம்முடைய பரலோக பிரவேசம் எந்த வழியாய் செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவேதான் பிதாவானவர் தம்முடைய சொந்தகுமாரனென்று பாராமல் நம்முடைய உபத்திரவத்தையெல்லாம் தம்முடைய மகன் சுமக்கும்படி செய்தார் என்று அறிகிறோம். ஆகவேதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், நீங்கள் என் நாமத்தினாலே எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள் என்று மத் 24:9ல் வாசிக்கிறோம். ஆம் பாடுகள் இல்லாமல் நிச்சயமாக பரலோகத்தை நினைத்துப் பார்க்காதீர் ஆனால் இன்றைய வாழ்க்கை சூழ்நிலையைப் பார்க்கும் போது அனேகர் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு போகமுடியாத சூழ்நிலையே காணப்படுகிறது ஏனென்றால் சிலர் வேதத்தை சபைக்கு எடுத்துச் செல்வதற்குப் பயப்படுகின்றனர். இன்னும் சிலர் வேலை ஸ்தலத்தில் தன்னை இரட்சிப்புக்குள்ளாக அதாவது தனக்காக அடிக்கப்பட்ட இயேசுவின் பெயரை சொல்வதற்குப் பயப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. இன்னும் சிலர் ஜெபக்கூட்டங்களுக்கு செல்வதற்குப் பயப்படுகின்றனர் ஏனென்றால் இயேசுவின் பெயரை சொன்னால் தங்களுடைய வேலை போய்விடுமோ அல்லது தங்களுடைய குடும்பம் பாதிக்கப்படுமோ என்கிற கவலை நம்மிடும் காணப்படுகிறது. இப்படி இருக்கையில் நாம் எப்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தைரியமாக சொல்ல முடியும் நிச்சயமாகவே முடியாது. வேதத்தில் ஒரு பாகத்தை ஞாபகப்படுத்தி நாம் எப்படி தைரியப்படுவது என்பதை நாம் பின்வருமாறு பார்க்கலாம். வேதம் சொல்லுகிறது, அகபு என்னும் ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்து பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக் கொண்டு இந்தக் கச்சைகளையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக் கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான், என்று அப் 21:10,11ல் வாசிக்கிறோம். அதற்குப் பவுல் சொல்லுகிற பதில் என்ன? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான் என்று அப் 21:13ல் அப்பவுலின் தைரியமான பதிலை நாம் பார்க்க முடிகிறது. ஆனால் இன்றைய தீர்க்கதரிசிகள் சொல்லுகிற ஒரு காரியம் நீ அந்த இடத்துப் போய் சுவிசேஷம் சொல்வது நல்லது அல்ல, அந்த நபருக்காக ஜெபம் செய்வது தெய்வ சித்தம் இல்லை மற்றும் சிலர் பிசாசு பிடித்தவனுக்கு ஜெபம் செய்ய வேண்டாம் ஏனென்றால் அவனுடைய பொல்லாத ஆவி நமக்கு வந்துவிடும் என்றெல்லாம் சொல்வதுண்டு ஆனால் தேவன் என்ன சொன்னார் நீங்கள் போய் எல்லாரையும் சுவிசேஷத்தை அறியும் படிச் செய்து அவர்களை என்னுடைய சீஷராக மாற்றுங்கள் அதுமட்டுமல்லாமல் பூமியில் கடைசிபரியந்தமும் எனக்கு சாட்சிகளாயிருப்பீர்கள் என்று மத் 28:19,20 மற்றும் அப் 1:8 லும் நாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஆகவே நாம் பயப்பட வேண்டாம் ஏனென்றால் மோசேயோடே மற்றும் யோசுவோடும் இருந்த தேவன் நம்மோடும் இருக்கிறார் எனவே நாம் தைரியங்கொண்டு சொல்லுவோம், கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் – பிலி 1:21 3.மூன்றாவது ஆயத்தம்: பிலேயாமுடைய போதகத்தை வெறுக்கிறவர்களாய் வாழ வேண்டும் வேதம் சொல்லுகிறது, கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலக வேண்டும் என்று 2தீமோ 2:19 ஒரு கிறிஸ்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக வெளிப்படுத்துவதை காண முடிகிறது ஆகவேதான் தேவன் சபைகளுக்கு எழுதும் போது சொல்லுகிற ஒரு காரியம் பிலேயாமுடைய போதகத்தை வெறுக்கிறவர்களாய் வாழ வேண்டும் ஏனென்றால் சபைகளில் பிலேயாமுடைய அநியாயத்தை அவர் பார்த்ததினால் இப்படியாக எழுதுகிறார் அது என்ன பிலேயாமின் அநியாயம், வேதத்தை எண்ணாகமத்துக்கும் மற்றும் யூதா வசனம் 11 க்கும் திருப்புவீர்களானால் தெரியும் பிலேயாம் செய்த தவறு பாருங்கள் பாலாக் என்னும் மோவாபிய ராஜா தான் இஸ்ரவேல் மூலமாய் அழிக்கப்பட்டுப்போவேன் என்று உணர்ந்து இஸ்ரவேலை சபிப்பதற்காக பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்து வரும்படி ஆள்களை அனுப்புகிறான் இந்த பிலேயாம் கர்த்தர் வார்த்தையைக் கேட்டு அதாவது தேவனால் இஸ்ரவேலை சபிக்காதபடி எச்சரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறான் ஆனாலும் உலகத்தின் மேலுள்ள ஆசையினால் தேவனுடைய கட்டளையை மீறிச் சென்றான் இதனிமித்தம் சாகவேண்டிய பிலேயாம் தன்னுடைய கழுதையின் மூலமாய் அதாவது தேவன் அவனுடைய கழுதையின் மூலம் அவன் கண்களைத் திறந்தார். இதன் நிமித்தம் அவன் காப்பாற்றப்பட்டான். ஆனல் அவனுடைய பின்பகுதியைப் பார்க்கும் போது மிகமோசமாக அமைந்தது, எப்படியென்றால் இதோ மோவாப் ராஜாவிற்கு அவன் கொடுத்த ஆலோசனையின் நிமித்தம் இஸ்ரவேல் ஜனங்கள் வேசித்தனம் என்னும் பாவம் செய்வதற்கு இவன் காரணமாய் அமைந்தான் ஆகவே இந்த பிலேயாம் தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு புறம்பாக தள்ளப்பட்டான் என்பதை நம்மால் உணரமுடிகிறது. இன்று அனேகர் மனுஷரைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்களோடு சேர்ந்து தேவசித்தத்திற்கு எதிர்த்து நிற்பதை பார்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் சபைகளில் தேவன் வெறுக்கிற காரியத்தை அனேகர் செய்து வருவதையும் பார்க்கமுடிகிறது ஏனென்றால் தேவன் இரக்கமுள்ளவர் அதுமட்டுமல்லாமல் இன்றைய நாட்களில் ஆதி அப்போஸ்தலர் சபையில் நடந்த பயங்ககரத்தை நாம் இன்றைய நாட்களில் பார்க்கவில்லை என்கிற சந்தோஷத்தினால் இப்படியாக தேவன் வெறுக்கிற காரியங்களை விருப்பப்பட்டு செய்து வருவதைப் பார்க்கலாம் தேவன் சொல்லுகிறார், நீ மனந்திரும்பாதபட்சத்தில் உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன் என்று வெளி 2:5 ல் இப்படிப்பட்ட சபைகளுக்கு ஒரு எச்சரிப்பைத் தருவதை நாம் உணரமுடிகிறது. 4.நான்காவது ஆயத்தம்: எப்பொழுதும் உயிருள்ளவர்களாய் இருக்க வேண்டும் வேதம் சொல்லுகிறது, நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் என்று வெளி 3:1ல் சபையின் நிலைமை எப்படியாக இருக்கிறது என்பதை தேவன் சுட்டிக் காட்டுகிறார். இன்று அனேக விசுவாசிகள் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வருவதை நாம் உணரமுடிகிறது. இவர்கள் நன்றாக வேத வசனங்களைப் பேசுவார்கள் ஜெப செய்வார்கள் ஆனால் இவர்களுடைய கிரியைகளோ இன்னும் மாமிச மனுஷனை திருப்திப்படுத்துவதாகக் காணப்படும். இவர்களை வேதம் எப்படி குறிப்பிடுகிறது என்றால் வெளியில் அழகாக வர்ணம் பூசப்பட்ட கல்லறையைப் போல காணப்படுகிறார்கள். ஆகவேதான் யோவான்ஸ்நானன் தன்னிடத்தில் ஞானஸ்நானம் எடுக்க வந்த பரிசேயரையும் சதுசேயரையும் பார்த்து சொல்லுகிறார் விரியன் பாம்புக் குட்டிகளே வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைக் காட்டினவர் யார்? என்று மத் 3:7ல் அவர்களை கடிந்து கொள்வதைப் பார்க்க முடிகிறது. ஏன் இந்த கடிந்து கொள்ளுதல் என்றால் அவர்களிடம் மனந்திரும்புதலுக்கான கனி இல்லை அதாவது இருதயம் குணப்படாமல் தேவனுடைய கோபத்துக்கு தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக வெறுமையான அதாவது அடையாளத்திற்காக ஞானஸ்நானத்தை பெற்றுக் கொள்ளும்படி வந்தனர். இன்னும் நம்மில் அனேகர் ஞானஸ்நானம் எடுத்து விட்டோம் ஆகவே பரலோகம் சென்று விடலாம் என்றும் சிலர் அபிஷேகம் பெற்று விட்டோம் ஆகவே பரலோகம் சென்று விடலாம் என்றும் இன்னும் சிலர் கடைசித்தருணத்தில் அதாவது மரண அவஸ்தையில் இயேசு இயேசு என்று சத்தமிட்டால் பரலோகம் சென்று விடலாம் என்கிற தப்பான எண்ணம் கொள்கிறார்கள். இவர்கள் பரலோக வாசலை கூட கனவில் பார்க்க முடியாது என்பதை மரக்க வேண்டாம். உலகத்தில் உயிரோடு தேவனுக்குப் பிரியமில்லாமல் அல்லது தன் சொந்த வேலையை மட்டும் பார்த்து வாழ்கிறதால் ஒரு பிரயோஜனமுமில்லை மாறாக சிறு வயதில் மரித்தாலும் பரலோகத்துக்கு செல்வதற்கான தகுதியை உடையவனே உயிருள்ளவனாய் வாழ்கிறவன் என்பதை இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். வேதம் சொல்லுகிறது, தூங்குகிற நீ விழித்து மரித்தோரை விட்டு எழுந்திரு – எபேசியர் 5:14 5.ஐந்தாவது ஆயத்தம்: எந்த சூழ்நிலையிலும் தேவனை மறுதலிக்காமல் இருக்க வேண்டும் தேவன் பிலதெல்பியா சபையைப் பார்த்து இப்படியாக சொல்லுகிறார், உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும் நீ என் நாமத்தை மறுதலியாமல் என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அதை ஒருவனும் பூட்டமாட்டான் என்று வெளி 3:8ல் தேவனை மறுதலிக்காதவர்களுக்கு கிடைக்கும் நன்மையை அழகாக எழுதி வைத்திருப்பதை ருசிபார்க்க முடிகிறது. நாமும் நம்முடைய கிரியைகளில் இவர்களைப் போல வாழ வேண்டும் எப்படியென்றால், சாத்தான் எப்படியாவது யோபுவை கொண்டு தேவனுடைய நாமத்தை தூஷித்து விடலாம் என்று தேவனிடம் யோபுவை சோதிப்பதற்காக உத்தரவு பெற்றுக் கொண்டான். அடுத்ததாக என்ன நடந்தது இதோ இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் கண்டிராத இழப்புகளை தாசனாகிய யோபு சந்திக்க தொடங்கலானார் ஆனால் யோபுவோ என்ன செய்தார் அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேவனை தூஷித்தாரா அல்லது இவர் என்னுடைய தேவன் இல்லை என்றாரா? வேதம் சொல்லுகிறது தன் மகனையும், மகளையும் எல்லா செல்வங்களையும் இழந்த போதிலும் தன்னுடைய மனைவி தன்னை இழிவாக பேசின போதிலும் அவர் தேவனை புகழ்ந்து பாடினார் என்று யோபு 1:21 ல் பார்க்கிறோம். நாம் எப்படி வாழ்கிறோம் கொஞ்சம் கஷ்டம் வந்துவிட்டால் போதும் தேவனே ஏன் இப்படியாக என்னை சோதிக்கிறீர் என்று தேவனை குறை சொல்லுகிறவர்களாய் வாழ்கிறோம் இதனிமித்தம் நம்முடைய தகப்பனுக்கு சாத்தானின் முன்பு தலை குனிவு ஏற்படுவதை ஏன் நம்மால் உணர முடியவில்லை, நாமும் யோபுவை போல வாழ வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும். தேவன் அப்.பவுல் மூலம் நமக்கு தரும் பதிலை கவனியுங்கள் எப்பொழுதும் இந்த உலகத்திலுள்ள செல்வங்கள் அன்பு எல்லாவற்றையும் இயேசுவுக்காக குப்பையும் நஷ்டமுமாக எண்ணுகிறோமா அப்பொழுது மாத்திரமே நாம் தேவனுக்காக வாழ முடியும் என்பதை ஒருநாளும் மறந்து விடாதீர் [ பிலி 3:7,8,11 ] 6.ஆறாவது ஆயத்தம்: எப்பொழுதும் அனலாய் இருக்க வேண்டும் ஒரு ஊழியக்காரர் இப்படியாக சொன்னார் சகோதரரே நான் திருமணத்திற்கு முன்பாக எவ்வளவு வல்லைமையாக பயன்பட்டேன் தெரியுமா? நான் கூட்டத்தில் நடந்து சென்றாலே எல்லாரும் விழுந்து விடுவார்கள். ஆனால் இப்பொழுதோ அதாவது திருமணத்திற்கு பிறகு அந்த வல்லமை போய்விட்டது ஏன் நாம் இப்படியாக சொல்ல நேரிடுகிறது. நாம் தேவனை அறிய வேண்டிய விதத்தில் அறியாததே அதாவது தேவன் தந்த கிருபையை தேவையில்லாதவற்றிற்கு பயன்படுத்துவதால் என்பதை மறக்க வேண்டாம். நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப் போடுவேன் என்று வெளி 3:16 ல் சொல்வதை பார்க்க முடிகிறது. எனக்கு அருமையான விசுவாசிகளே நாமும் சில வேளைகளில் நம்முடைய அனலை சேரக்கூடாத நபருடன் சேர்ந்து குளிராக மாறிவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது. எப்படியென்றால் சிலர் இரட்சிக்கப்பட்டு ஆவியில் வளர்ந்த பிறகு அதாவது ஆவிக்குரிய வாழ்க்கையில் பூரண புருஷரான பின்பு இரட்சிப்பில்லாத உண்மை சத்தியம் போதிக்கப்படாத சபைகளில் கூட்டாமைப்பு வைத்து தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அவித்துப் போடுவதை நாம் இன்றைய கால கட்டத்தில் பார்க்க முடிகிறது. இதுவும் சாத்தானின் ஒருவித தந்திரம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர். இப்படியாக ஜாதி அடிப்படையில் சபையை நடத்துகிறவர்களைப் பார்த்து தேவன் சொல்லுகிற ஒரு காரியம், உங்களை வாந்திப்பண்ணி போட்டுவிடுவேன் இப்படிப்பட்ட காரியங்கள் தம்முடைய ஜனத்தின் மத்தியில் நடந்து விடக்கூடாது என்பதற்காக அவர் தம்முடைய ஊழியக்காரனைப் பார்த்து சொல்லுகிறார், இதோ நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும் இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன் அது இவர்களைப் பட்சிக்கும் [ எரேமியா 5:14 ] எதற்காக தம்முடைய ஜனத்தை அவர் பற்றி எறியச் செய்ய வேண்டும், பழைய, தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களை தேவன் இவர்களுடைய பிதாக்களிடத்தில் பார்த்ததின் நிமித்தமாக அவர் இப்படியாக ஒரு காரியத்தைச் செய்கிறார். நம்முடைய வாழ்க்கையும் எப்பொழுதும் தேவனுக்குப் பிரியமாய் இருக்க வேண்டுமானால் நாமும் ஒவ்வொரு நாளும் இந்த அக்கினி அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எப்படி விளக்கு எரிவதற்கு எரிபொருள் தேவையோ இதேபோலத்தான் நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் இந்த மூன்றும் ஒருமித்து பரிசுத்தமாக பற்றி எறிய தேவனுடைய பரிசுத்த அக்கினியாகிய அபிஷேகம் தேவை என்பதை மறக்க வேண்டாம். ஆகவே தேவன் சொல்லுகிறார். என்னுடைய ஊழியக்காரர்களை அக்கினியாகவும் அக்கினி ஜீவாலையாகவும் மாற்றுகிறேன் என்று சங் 104:4.

The Bible

Stjohns church, Mission kovil street, Arumuganeri
Submit Request