Loading...

தேவனால் பிறந்த மனிதன்

Mountain View

For Auto Scrolling Click Here

-->

தேவனால் பிறந்த மனிதன் சகோதரி. அனு ஃபெஸ்லின் இயேசு கிறிஸ்து நிக்கொதேமுவிடம் ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்(யோ:3:3) பிறப்பது என்பது கருவறையில் இருக்கிற தொப்புள் கொடி உறவை அறுத்து புதிய வாழ்க்கைக்கு நேராக உலகத்தில் காலடி வைப்பது. ஒரு குழந்தை பிறக்கும் போது தொப்புள் கொடி உறவு துண்டிக்கப்பட்டு ஒரு புதிய உறவு ஏற்படுகிறது. உலகத்தில் பிறந்த பிறகு எந்த குழந்தையும் கருவறைக்குள் மீண்டும் சென்று வாழ வேண்டும் என்றோ அல்லது அந்த பழைய கருவறை வாழ்க்கையை பற்றியோ எண்ணுவதில்லை. நாம் சாரியாக சிந்தித்தால், ஒரு குழந்தைக்கு கடந்த காலம் இருந்தாலும் அதை நாம் எண்ணுவது இல்லை. அதன் எதிர்காலத்தை மட்டுமே சிந்திக்கிறோம். அதுபோல மறுபடியும் பிறப்பது என்பது ஒரு மனிதன் தான் உலகத்தின் மாமிச வாழ்வையும் அதன் உறவையும் துண்டித்து விட்டு ஒரு புதிய வாழ்க்கைக்கு நேராக அடி எடுத்து வைப்பது. அதாவது உலகத்தின் உறவை துண்டித்து விட்டு தேவனோடுள்ள உறவுக்கு நேராக திரும்புவது தான் மறுபடியும் பிறப்பது. ஒரு பிறந்த குழந்தைக்கு எப்படி கடந்த காலம் என்பது இல்லையோ அது போல ஒரு மனிதன் கடந்த காலத்தை பார்க்காமல் கிறிஸ்து தனக்காக நியமித்திருக்கிற எதிர் காலத்தை அவர் நமக்காய் செய்த மேன்மையை எண்ணி அவரை விசுவாசிக்கும் விசுவாசத்தோடு நோக்கி திரும்புவது தான் மறுபடியும் பிறப்பது. நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம்பண்ணப்பட்டு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்தவர்ளாகவும் இருக்கிறோம்(ரோ 6:3-13). தேவனால் பிறந்த மனிதனின் அடையாளங்கள் அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அவர்கள் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்(யோ 1:12,13). தேவனால் பிறந்த ஒரு மனிதனின் குணாதிசயங்களை அல்லது அடையாளங்களை நாம் வேதத்தின் அடிப்படையில் பார்க்கலாம். 1. நீதியான வாழ்வு நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள் என்று 1 யோ 1:29 ல் நாம் வேதத்தில் வாசிக்கலாம். இயேசு கிறிஸ்துவின் ஊழியப்பாதையில் அவர் நீதியை குறித்து பல சூழ்நிலைகளில் பேசுவதை வேதம் காண்பிக்கிறது. மலை பிரசங்கத்தின் போது, முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்று இயேசு சொல்லுவதை மத் 6:33 ல் காணலாம். வேதபாரகர் பரிசேயருடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாய் இராவிட்டால் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று இயேசு கூறியுள்ளார். நீதியை மனித நீதி, தேவ நீதி என்று இரண்டு வகையாக பிரிக்கலாம். · மனித நீதி இயேசு வேதபாரகர் பரிசேயரை குறித்து மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள், உள்ளமோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறது என்று சொல்லுகிறார். நம் தேவன் இருதயங்களை அறிந்திருக்கிறார். அவர் முகத்தை பார்க்கிறவர் அல்ல. நம்முடைய நீதி அவருக்கு முன்பாக அழுக்கான கந்தையை போல இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதும்போது அவர்கள் தேவ நீதியை அறியாமல் தங்கள் சுய நீதியை நிலைநிறுத்த தேடுகிற படியால் தேவ நீதிக்கு கீழ்ப்படியாதிருக்கிறார்கள்(ரோ 10:3) என்று சொல்லுகிறார். சுய நீதியினால் நாம் நம்மை தேவனிடத்தில் நீதிமானாய் காட்ட முடியாது. நாம் தேவனுக்கு முன்பாக நிற்பதற்கு அவருக்கு இணையான நீதியை தரித்துக்கொள்ள வேண்டும். நீதியை சரிக்கட்டுகிற தேவன் நீதியின் விளைச்சலை நம்மிடம் எதிர்பார்க்கிறார். · தேவ நீதி நாம் எப்போதும் தேவனின் நீதியாகிய இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்ள வேண்டும்.(ரோமர்:6:19)நீதிக்கேதுவான கீழ்படிதலுக்கு நம்மை அடிமைகளாக ஒப்பு கொடுத்து தேவனுக்கு கீழ்படியும் போது பரிசுத்தமாகுதல் நமக்கு கிடக்கும் பலன் முடிவோ நித்தியா ஜீவன். தேவனுடைய ஆவி நமக்குள் வாசமாய் இருந்தால் நம் ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாய் இருக்கும்.நியாயப் பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாய் இராமல் கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாச மூலமாய் வருகிறதுமான நீதியை உடையவனாய் இருந்தேன் என பவுல் தன்னை குறித்து கூறுகிறார்[பிலிப்பியர்:3:9]. நாம் எதை செய்தாலும் நம் மகிமையை தேடாமல் தேவ மகிமையை தேட வேண்டும். நாம் மாம்சத்தின் படி நடவாமல் ஆவியினால் நடத்தப்பட்டு விசுவாச விதைகளை கிரியைகளினால் விதைத்து நீதியின் விளைச்சலை தேவனுக்கு கொடுக்க வேண்டும். 2. பரிசுத்தமான வாழ்வு தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்(Iயோவான்:3:9).தேவனால் பிறந்த மனிதன் அவர் பரிசுத்தமுள்ளவராய் இருக்கிறது போல தன்னையும் சுத்திகரித்து கொள்ளுகிறான். ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது. பிசாசினுடைய கிரியைகளை அளிக்கும்படி தேவனுடைய குமாரன் வெளிப்பட்டு நமக்காக பலியாகி உயிரோடு எழுந்தார். எனவே அவரோடு கூட நாம் உண்மையாய் பாவத்துக்கு மரித்து எழுந்திருந்தோமானால் பாவம் செய்ய விரும்ப மாட்டோம். திராட்சை செடியாகிய அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை (Iயோவான்:5:18).ஏனென்றால் வேரானது பரிசுத்தமாய் இருந்தால் கிளைகளும் பரிசுத்தமாய் இருக்கும். பாவம் செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமை, பிசாசினால் உண்டாயிருக்கிறான் என வேதம் கூறுகிறது. மனந்திரும்பி மறுபடியும் பிறந்த நாம் மீண்டும் பாவம் செய்வோமானால் நாம் பிசாசினால் உண்டாகி அவனுக்கு அடிமையாய் இருக்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். நம்மை நாமே சோதித்து பார்ப்போமாக. நாம் தேவனுடைய நீதியை நிறைவேற்ற வேண்டுமானால் பரிசுத்தமான பாவமில்லாத வாழ்வு நம்மிடம் வேண்டும். நம்முடைய வாழ்க்கையில், செயலில், சிந்தையில், நடத்தையில் பரிசுத்தமாய் வாழ்வோம். ஒவ்வொரு நாளும் நாம் செய்த பாவத்தை அறிக்கையிட்டு தேவனுடைய பரிசுத்தத்துக்கு நிகராய் நம்மை பரிசுத்தப்படுத்தி இயேசு கிறிஸ்துவை போல மாற முயற்சிப்போம். 3. அன்பின் வாழ்வு நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்(Iயோவான்:4:8). இயேசு நியாய சாஸ்திரியிடம், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று இரண்டு கற்பனைகைளை சொல்லி, இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். பவுலும் இந்த ஒரே வார்த்தையினால் நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும் என்று இரண்டாம் கற்பனையையை குறித்து கூறுகிறார் (கலாத்தியர்:5:14).அவருடைய கற்பனைகளை கைகொள்ளுவதே தேவனிடத்தில் அன்புகூருவது. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே(Iதீமோத்தேயு:1:5). நாம் எதற்காக தேவனிடம் அன்பு கூறுகிறோம் உலகபிரகாரமான ஆசீர்வத்ங்களுகாகவா? அற்புதங்களுக்காகவா? பிரியமானவர்களே நாம் எந்த எதிர்பார்ப்புமின்றி தேவனிடத்தில் முழுமையாக அன்புகூரும் போது நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்ற முடியும். மரித்த ஜடத்திடம் என்ன திட்டினாலும் பதில் இருக்காது. அது போல மரித்து எழுந்த நம்மிடம் பாவ காரியங்கள் மேற்கொள்ளகூடாது. நாம் கிறிஸ்துவோடு கூட மாம்சத்தின் கிரியைகளை சிலுவையில் அறைந்து மரித்து புது ஜீவனுள்ளவர்களாய் பிறந்திருப்போமானால் ஆவியின் கனிகளை பிரதிபலிக்க முற்படுவோம். அதற்கு தெய்வீக அன்பு நமக்கு தேவை. அந்த தெய்வீக அன்பு பரிசுத்த ஆவியினால் நமக்குள் ஊற்றப்படுகிறது (ரோமர்:5:5). நம்முடைய சுய முயற்சியினால் நாம் மாயமற்ற உண்மையான அன்பை பிறரிடம் காண்பிக்க முடியாது. தெய்வீக அன்பு நமக்குள் ஊற்றப்படும் போது தன் நாம் நம் சத்துருக்களையும் ஆசீர்வதிக்க, நேசிக்க, மன்னிக்க முடியும். Iகொரிந்தியர்: 13-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிற அன்பின் குணாதிசயங்கள் நம்மிடம் இருக்கிறதா என்று சிந்தித்து பார்ப்போம். நாம் காண்கிற சகோதரரிடத்தில் தான் தேவ அன்பை வெளிப்படுத்த முடியும்.இரட்சிக்கப்பட்ட நாம் தெய்வீக அன்பை நம் அயலகத்தாரிடம் வேலை ஸ்தலங்களில் மற்றும் எல்லா இடங்களிலும் காண்பிக்கும் போது இயேசுவை காண்பிப்போம், மற்றவர்களையும் இரட்சிப்போம். 4. வெற்றியுள்ள விசுவாச வாழ்வு இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான் (Iயோவான்:5:1-5). தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் வெற்றியுள்ள விசுவாச வாழ்வு வாழ்கிறோமா என்பது கேள்விகுறி தான். நம்முடைய விசுவாசத்தை கிரியையில் வெளிப்படுத்துவதே வெற்றியுள்ள விசுவாச வாழ்வின் அடையாளம். விசுவாச கிரியைகளினால் நாம் அவரை அறிக்கை செய்ய வேண்டும். பவுலும் சீலாவும் சிறைசாலையில் துன்பமான சூழ்நிலையிலும் தேவனை மகிமைபடுத்தினார்கள், சிறைசாலை அதிகாரியும் அவன் வீட்டாரும் இரட்சிக்கப்பட்டார்கள். நூற்றுக்கதிபதியின் விசுவாசம் அவன் வேலைக்காரனை இரட்சித்தது. இயேசுவும் ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சி கொடுத்ததை காணலாம். ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது (யாக்கோபு:2:15-26). ஆபிரகாபின் வாழ்க்கையில், விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறோம். நாமும் உலகத்தை ஜெயிக்கிற வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ முற்படுவோமாக. 5. காத்து கொள்ளுகிற வாழ்வு தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்(யோவான்:5:18). மறுபடியும் பிறந்த நாம் உலகத்தால் கறைபடாத படி நம் ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டும். தேவன் நமக்கு கொடுத்த இரட்சிப்பையும் நம்முடைய விசுவாசத்தையும் முடிவுபரியந்தம் காத்துக்கொள்ள வேண்டும். எதிரியானவன் நம்மை குறித்து சொல்ல ஒன்றும் இல்லாமல் வெட்கப்படும் படி நாம் நம்மை சுத்தவானாக காத்து கொள்ள வேண்டும். உலகத்திலே நமக்கு போராட்டம் உண்டு, சத்துரு நம் மீது அம்புகளை எய்வான், ஆனால் நாம் தேவ ஆளுகைக்கு உட்பட்டு அவர் நம்மை ஆளும் போது பொல்லாங்கன் நம்மை தொட முடியாது. உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட நற்பொருளைக் காத்துக் கொள் என்று பவுல் தீமோத்தேயுக்கு கூறுகிறார்(Iதீமோத்தேயு:1:14). வேதத்தின் படி எல்லா காவலோடும் இருதயத்தை, நம்முடைய வழிகளை, நாவைக் காத்துக் கொள்ள எச்சரிக்கபடுகிறோம். உலகத்தால் கறைபடாதபடிக்கு நம்மை காத்து கொள்ளுவது பிதாவாகிய தேவனுக்கு முன்பாக சுத்தமான பக்தியாய் இருக்கிறது(யாக்கோபு:1:27). நம்முடைய ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து நீதியுள்ள நியாயாதிபதியாய் வரும் போது அவருக்கு முன்பாக வெட்கப்பட்டு போகாதபடிக்கு நாம் நம்மை கறை திறை அற்றவர்களாய் காத்து கொள்ளுவோமாக. 6. ஜீவனுள்ள வாழ்வு தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன் (Iயோவான்:5:15-16).சீமோன் பேதுரு இயேசுவை ஜீவனுள்ள குமாரனாகிய கிறிஸ்து என அறிக்கை பண்ணுவதை வேதத்தில் காண்கிறோம். இயேசு கிறிஸ்து ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று கூறியுள்ளார்.(யோவான்:8:51). நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்(யோவான்:11:26). நாம் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரோடுக் கூட வாழும் போது நித்திய ஜீவன் பூமியில் ஆரம்பிக்கிறது.அதாவது நம்முடைய ஆவி உயிர் பெறுகிறது. அதனால் நாம் ஆவிக்குரிய மரணத்தை காண்பதில்லை உலகப்பிரகாரமான மரணத்தை மட்டும் காண்கிறோம். நம்முடைய ஆவி நித்திய நித்தியமாய் தேவனோடு உறவாடுவதாய் இருக்கும். இயேசுவை மறுதலித்து மரித்து போயிருந்த பேதுரு பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்ட போது வியாதியஸ்தரை குணமாக்கி மரித்த தொற்காளை உயிரோடு எழுப்பினதையும் நாம் காணலாம். பேதுருவின் ஊழியப் பாதையில் அவனுடைய நிழலாகிலும் பட வியாதியஸ்தர் காத்திருந்தனர். நாம் இயேசுவை விசுவாசித்து இரட்சிக் கப்பட்டு பரிசுத்த ஆவியின் அபிஷேகததோடு வழி நடத்தப்படும் போது ஜீவனுள்ள வாழ்வு வாழ ஆரம்பிகிறோம் அந்த ஜீவன் நம்மில் வெளிப்பட வேண்டும்.பிரியமானவர்களே மரித்து போன வாழ்வு நமக்கு இனி வேண்டாம். நித்தியமான ஜீவனுள்ள வாழ்வு வாழ ஆரம்பிப்போமா? கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே மறுபடியும் பிறந்த நாமும் கூட நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போமாக. இத்தகைய குணாதிசயங்கள் நம்மிடம் உள்ளதா? நாம் ஜீவன் சுதந்தரித்து கொள்ள தேவனை நோக்கி ஓடுகிறோமா? உலகத்தை நோக்கி ஓடுகிறோமா? மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தி கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபமென்ன? நாம் புதிதான ஜீவனுள்ளவர்களை ஆவியின் சிந்தையோடு பரிசுத்த ஆவியின் வழிந டத்தலோடு நமக்கு நியமித்திருக்கிற விசுவாச ஓட்டத்தில் பரிசுத்ததோடும், அன்போடும், தேவ நீதியை நிறைவேற்றுகிறவர்களாய் நித்திய ஜீவனைப் பெற்றுகொள்ள பொறுமையோடு ஓடக்கடவோம். தேவன் நம் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. Praise the Lord

The Bible

Stjohns church, Mission kovil street, Arumuganeri
Submit Request